இளம் ரசிகர்களை ஈர்க்கும் புதுமுகம் சிவ நிஷாந்த் !

இயக்குநர் ஹரி உத்தாரா இயக்கத்தில் I Creations தயாரிப்பில் வெளிவந்த “கல்தா” படம் மூலம் அறிமுகமானவர்  இளம் நடிகர் சிவநிஷாந்த். சமூகநோக்கத்தோடு அரசியல் படமாக உருவாகியிருந்த இப்படத்தில் நடிகர் சிவநிஷாந்த் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. எல்லா இளம் நடிகர்களும் தங்களுடைய அறிமுகபடமாக காதல் படங்களில் நடிப்பதையே விரும்புவார்கள். ஆனால் அதிலும் வித்தியாசமாக இவர் சமூகத்திற்கான அரசியல் படத்தில் அறிமுகமானார். படத்தில் இவரது நடிப்பை விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருங்கே பாராட்டியிருந்தார்கள். 

முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தற்போது இயக்குநர் விஜய் கந்தசாமி இயக்கத்தில் PGP Enterprisers தயாரிக்கும் “துப்பாக்கியின் கதை” படத்தில் ஒரு வித்தியாசாமான பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இது தவிர மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மணி சேகர் தயாரிப்பில் ஒரு படத்திலும் மற்றுமொரு பெயரிடப்படாத புதிய படத்திலும் நடித்து வருகிறார். திரையுலக  கலைஞர்களால் இளம் நெஞ்சங்களை ஈர்க்கும் வசீகரத்துடன்,  நடிப்பு திறமை கொண்டவர் எனும் பாராட்டையும் பெற்றுள்ள இவர்,  திரையுலகில் முதல் படத்திலேயே பாராட்டு பெற்று, உடனடியாக அடுத்தடுத்து, முக்கியமான படங்களில் நடிக்கும், இளம் நடிகராக வளர்ந்து வருகிறார்.

ரசிகர்கள் மனதில்  இடம்பிடிப்பதோடு, வித்தியாசாமான கதாப்பாத்திரங்களில் நடித்து,  தமிழ் சினிமாவில் தரமான நல்ல  படங்களை தருவதே எனது குறிக்கோள். ஒரு நட்சத்திரமாக மட்டுமல்லாமல் ஒரு நல்ல நடிகர் என்றும் பெயரெடுக்க வேண்டும் அதுவே தனது ஆசை எனக் கூறியுள்ளார்.

No comments